Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரமாண்ட படமான பத்மாவத் படத்தின் தமிழ் ட்ரைலர்

padmaavat movie official tamil trailer

பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 'பத்மாவதி' படம் உருவாகி தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுத்து வரும் இப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே ஜோடியாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி திரைக்கு வருவதாக இருந்த இத்திரைப்படம், சித்தூர் ராணி பத்மாவதி வரலாற்றை தவறாக சித்தரிக்கப் பட்டிருப்பதாக தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தினரிடையே எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர். 

மேலும் படத்தினை வெளியிடுவதற்கு ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி படத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பக்க தரப்பினையும் விசாரித்த வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா சர்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதால் மீண்டும் படத்தினை தணிக்கை குழுக்கு அனுப்ப வேண்டுமென மனுவை தாக்கல் செய்தார். நீண்ட நாள் சர்ச்சைக்கு பிறகு இந்த படத்தின் 23 காட்சிகளை நீக்கிய பிறகு இந்த படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தலைப்பையும் மாற்றி 'பத்மவத்' என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜனவரி 25-இல் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

பிரமாண்ட படமான பத்மாவத் படத்தின் தமிழ் ட்ரைலர்