சர்ச்சைக்குள்ளான பத்மாவதி படத்தின் தலைப்பு மாற்றம்
ராசு (Author) Published Date : Dec 31, 2017 09:21 ISTபொழுதுபோக்கு
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தற்பொழுது 'பத்மாவதி' படத்தினை இயக்கியுள்ளார். ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுத்து வரும் இப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே ஜோடியாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி திரைக்கு வருவதாக இருந்த இத்திரைப்படம், சித்தூர் ராணி பத்மாவதி வரலாற்றை தவறாக சித்தரிக்கப் பட்டிருப்பதாக தொடர்ந்து ராஜ்புத் சமூகத்தினரிடையே எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர்.
மேலும் படத்தினை வெளியிடுவதற்கு ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 17ம் தேதி படத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு பக்க தரப்பினையும் விசாரித்த வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா சர்சைக்குரிய காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப்பதால் மீண்டும் படத்தினை தணிக்கை குழுக்கு அனுப்ப வேண்டுமென மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த திரைப்படத்தை பிரிட்டனில் உள்ள சென்சார் குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தது. படத்தினை பார்த்த பிரிட்டன் சென்சார் குழுவினர் படத்தினை வெளியிடுவதற்கு அனுமதியை கொடுத்துள்ளது.
மேலும் இந்த படத்திற்கு 12ஏ சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் காரணமாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்கக்கூடாது எனவும் 18 வயதை தாண்டிய அடல்ட்ஸ் மட்டும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் 23 காட்சிகளை நீக்கிய பிறகு இந்த படத்திற்கு யூஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தலைப்பையும் மாற்றி 'பத்மவத்' என்று வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.