Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பார்த்திபனின் கேணி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

keni movie released on february 23rd

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான எம்ஏ நிஷாட் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'கேணி'. இந்த படம் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையே உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை பற்றி எடுத்து சொல்லும் படமாகும். இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் பார்த்திபன், ஜெயபிரதா, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் தலைவாசல் விஜய், அர்ச்சனா, அணு ஹாசன், நாசர், பார்வதி நம்பியார், பசுபதி, எம்எஸ் பாஸ்கர், ஜாய் மெத்திவ், இன்ட்ரன்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை ப்ராக்ரண்ட் நேச்சர் பிலிம் கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சஜீவ் பிகே, அஜூ சஜீவ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு மலையாள இசையமைப்பாளர்கள் எம் ஜெயசந்திரன் மற்றும் பிஜிப்பால் ஆகியோர் இசைஅமைத்துள்ளனர். இந்த படம் தமிழில் 'கேணி' என்ற தலைப்பிலும், மலையாளத்தில் 'கினர்' என்ற தலைப்பிலும் வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

பார்த்திபனின் கேணி படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு