பாப் கிங் மைக்கல் ஜாக்சனின் 45டிகிரி நடனத்தில் ஒழிந்திருக்கும் ரகசியம்
வேலுசாமி (Author) Published Date : May 24, 2018 10:55 ISTபொழுதுபோக்கு
உலகம் முழுவதும் இசை பிரியர்களால் பாப் கிங் என்றழைக்கப்படும் மைக்கல் ஜாக்சன், தன்னுடைய 50வது வயதில் 2009இல் மாரடைப்பு காரணமாக இறந்தார். இவர் இறந்தாலும் இவருடைய சாதனைகளும், திறமைகளும் காலத்தால் அழியாத புகழை பெற்றுள்ளது. இன்றளவும் மைக்கல் ஜாக்சன் நடத்திற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்புகள் இருந்து வருகிறது. ஒரு இசை குடும்பத்தில் பிறந்த இவர், 1982இல் வெளிவந்த த்ரில்லர் பாடல் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர்.
இந்த பாடல், இசை துறையில் விற்பனை பட்டியலில் தற்போது வரையிலும் முதல் இடத்தில் உள்ளது. அதே போன்று இவருடைய நடத்தில் ஒழிந்திருக்கும் ரகசியங்களும் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. இவருடைய நடனத்தில் வெளிவந்த ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) பாடலில் இடம்பெற்ற இவருடைய 45டிகிரி சாய்ந்தாடும் நடனம் ரசிகர்களுக்கு புரியாத புதிராக உள்ளது. இந்த பாடலில் கயிறு மூலம் சாய்ந்து ஆடியிருப்பார் என்று பலர் நினைத்திருக்கலாம் ஆனால் இவர் எந்த உதவியும் இல்லாமல் 45டிகிரி வளைந்து ஆடியுள்ளார்.
இதில் ஒழிந்திருக்கும் ரகசியத்தை ஆராய இந்தியாவை சேர்ந்த 'Postgraduate Institute of Medical Education and Research (PGIMER)' பல்கலையை சேர்ந்த மூன்று நரம்பியல் வல்லுநர்கள் விரைந்துள்ளனர். ஆய்வாளர்கள் இது குறித்து எப்படி அந்த வளைவை சமாளித்தார், எப்படி அது சாத்தியமானது போன்ற பல கோணங்களில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு மேலாக ஆய்வு செய்ததில், அவருடைய நடன திறமைக்காகவே வித்தியாசமான காலணியை பயன்படுத்தியது தெரியவந்தது.
மேலும் இவருடைய தசைகளும் சாதாரண மனிதர்களை விட பலமானதாக இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த வித்தியாசமான காலணி உதவியுடன் தன்னுடைய 45டிகிரி வளைவு நடனத்தை சாத்தியமாகியுள்ளார். மேலும் இவருடைய நடனத்தை பார்த்து ஏராளமானோர் அவரை போன்றே முயற்சி செய்ததில் அனைவரும் மருத்துமனையில் தான் உள்ளனர். இதனால் அவருடைய வளைவு நடனங்களை யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.