Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

துபாயில் தொடரும் சாஹூ படத்தின் சண்டை காட்சி

saaho next schedule at dubai

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் அதிரடி த்ரில்லர் படமான 'சாஹூ' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் சுஜித் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் நாயகியாக இணைந்துள்ளார். மேலும் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண் விஜய் வில்லன் கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல் வந்திருந்தது. இதனை மறுத்து அருண் விஜய் அவரது ட்விட்டரில் நேர் மறை கெட்டப்பில் நடித்து வருவதாக பதிவு செய்து தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜாக்கி ஷ்ரோப், லால், மந்திர பேடி மற்றும் நீல் நிதின் முகேஷ் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இதில் நீல் நிதின் முகேஷ் என்பவர் விஜய் நடிப்பில் வெளிவந்த 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்திந்தது குறிப்பிட தக்கது.     

UV Creations தயாரிப்பு நிறுவனம் சார்பில் வம்சி கிருஷ்ணா ரெட்டி தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்,டீசர் போன்றவை முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வெற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்து துபாயில் 60 நாட்கள் நடக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் பிரபாஸ் மற்றும் நீல் நிதின் இருவருக்கும் இடையே நடைபெற இருக்கும் அதிரடி சண்டை காட்சிகளை படமாக்கப்பட உள்ளனர். மேலும் இந்த சண்டை காட்சிகள் உயர்ந்த கட்டிடத்தின் மீது நடைபெற இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.                 

 

துபாயில் தொடரும் சாஹூ படத்தின் சண்டை காட்சி