பிரபாஸுக்கு இப்படி ஒரு தீவிர ரசிகையா ! என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?
ராசு (Author) Published Date : Nov 17, 2017 20:30 ISTபொழுதுபோக்கு
தெலுங்கு திரைப்பட நடிகர் பிரபாஸ் தற்பொழுது நடித்த 'சாஹோ' படத்தினை சேர்த்து இது வரை 19 படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் கொடுக்காத வெற்றியை 'பாகுபலி' படத்தின் மூலம் வரலாறு காணாத அளவிற்கு வெற்றி பெற்றார். இப்படத்தினை இந்திய திரையுலகமே திரும்பி பார்த்து ஆச்சர்யப்படும் அளவிற்கு மெகா ஹிட் அடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரே படத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாபெரும் ரசிகர்களின் வட்டாரத்தினை பிடித்திருந்தார்.
பாகுபலி படத்தின் மூலம் அதிகளவு பெண்களின் வட்டாரத்தினையும் பிரபாஸ் பிடித்திருந்தார். இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் வெளியீட்டின் போது 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளம் பெண்கள் பிரபாஷை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்களை வெளியிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் ஒரு இளம் பெண் பிரபாஸின் தீவிர ரசிகையாக இருந்திருக்கிறார். இந்நிலையில் பாகுபலி வேடத்தில் இருக்கும் பிரபாஸின் புகைப்படத்தை தன் முதுகில் டாட்டூ போட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளார்.