காளகேய தலைவனுடன் மல்லு கட்டிய பிரபு தேவா
புருசோத்தமன் (Author) Published Date : Oct 03, 2018 10:46 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவா நடிப்பில் 'லட்சுமி' படத்திற்கு பிறகு பொன் மாணிக்கவேல், தேள், காமோஷி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, தேவி 2 போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் புது முக இயக்குனரான எம்எஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் 'யங் மங் சங்' படத்தில் பிரபு தேவா கும் பூ மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனும், காமெடி நடிகராக ஆர்ஜே பாலாஜியும் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியை சென்னைக்கு அருகே உள்ள பொழிச்சலூர் காட்டு பகுதிக்குள் தொடர்ந்து ஏழு நாட்கள் நடத்தினர். இந்த படப்பிடிப்பில் பிரபு தேவா மற்றும் 'பாகுபலி' படத்தில் காலகேய தலைவனாக நடித்த பிரபாகர் ஆகியோரது சண்டை காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகரான பிரபாகர், பிரபு தேவாவிற்கு எதிராக சண்டை பயிற்சி அளிக்கும் மற்றொரு கும் பூ மாஸ்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். பாகுபலிக்கு பிறகு நடிகர் பிரபாகர் நடிப்பில் உருவாகி வரும் இரண்டாவது தமிழ் படம் 'யங் மங் சங்'. இந்த படத்தில் இயக்குனர் தங்கர் பச்சான், சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் என்பவர் இசையமைத்து வருகிறார்.