Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காவல் அதிகாரியான பிரபு தேவாவின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு

பிரபு தேவா நடிப்பில் உதவி இயக்குனர் ஏசி முகில் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்பட தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர், நடன ஆசிரியர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பிரபு தேவா, குலேபகாவலி, மெர்குரி படங்களுக்கு பிறகு லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, காமோஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் முகில் செல்லப்பன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபு தேவா முதன் முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. நேமிசந்த் ஐபக் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு 'பொன் மாணிக்கவேல்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில் முன்னதாக வெளியான 'டிக் டிக் டிக்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஆக்சன் அதிரடியாக உருவாகிவரும் இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இந்தியில் பிரபு தேவாவுடன் இணைந்து ரவுடி ரத்தோர், வஷ்டவய, ஆக்சன் ஜாக்சன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஏசி முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். 

காவல் அதிகாரியான பிரபு தேவாவின் புதுப்பட தலைப்பு அறிவிப்பு