Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இரு நடன ஆசிரியர்களின் கூட்டணியில் உருவாகும் தேள்

பிரபு தேவாவின் புது படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்திற்கு தேள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரபு தேவா நடிப்பில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'லக்ஷ்மி'. நடனத்தை மையமாக வைத்து வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு பிரபு தேவா நடிப்பில் யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 மற்றும் பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

தற்போது பிரபு தேவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பூஜையும் இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தை நடிகர் மற்றும் நடன ஆசிரியரான ஹரிக்குமார் என்பவர் இயக்க உள்ளார். இவர் ரஜினியின் பாஷா, முத்து போன்ற பல படங்களில் பின்னணி நடனமாடி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்கள் மூலம் நாயகனாக பிரபலமானவர்.

இது தவிர ஒரு நடன ஆசிரியராகவும் நரசிம்மா, இயற்கை, பாலா, ஒரு நாள் ஒரு கனவு போன்ற 100க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது பிரபு தேவாவை வைத்து புதுப்படம் ஒன்றை இயக்க உள்ளார். முதன் முறையாக பிரபு தேவா, ஹரிக்குமார் இணைந்துள்ள இந்த படத்திற்கு 'தேள்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு சி சத்யா என்பவர் இசையமைக்க உள்ளார்.

இரு நடன ஆசிரியர்களின் கூட்டணியில் உருவாகும் தேள்