Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'கரு' படத்தின் ட்ரைலரை வெளியீடும் பிரபு தேவா

karu movie trailer release by prabhu deva

'வனமகன்' படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'கரு'. இந்த படத்தை பெண்களை மையமாக கொண்டு தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் சாய் பல்லவி, நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.  இந்த படத்திற்கு விக்ரம் வேதா படத்தில் பிரபலமான சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் சார்பில் அல்லிராஜா சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபு தேவா 'தேவி' படத்தின் மூலம் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் நெருங்கி நண்பர்களாக பழகினர். இதனை அடுத்து 'கரு' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபு தேவா வெளியிட்டார். தற்போது 'கரு' படத்தின் ட்ரைலரை நடிகர் பிரபு தேவா வரும் 18-ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

'கரு' படத்தின் ட்ரைலரை வெளியீடும் பிரபு தேவா