Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உதயநிதி ஸ்டாலின் படத்தில் மேயாத மான் நாயகிகள்

கண்ணே கலைமானே படத்திற்கு பிறகு உதயநிதி இநோக் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தில் மேயாத மான் நாயகிகள் இணைந்துள்ளனர்.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இறுதியாக 'நிமிர்' படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் இயக்கியிருந்தார். காதலையும், தனி மனிதனின் சபதத்தையும் கிராமத்து பின்னணியில் மிகவும் அழகாக சொல்லியிருந்தார். இந்த படத்தில் பின்னணியில் வரும் பசுமை நிறைந்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனை தொடர்ந்து உதயநிதி தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி வரும் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் பிறகு உதயநிதி அடுத்ததாக இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான இநோக் என்பவர் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தில் இரு நாயகிகள் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'மேயாத மான்' படத்தின் மூலம் அறிமுகமான விளம்பர நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அறிமுக நடிகை இந்துஜா ஆகியோர் உதயநிதி ஸ்டாலினின் புது படத்தில் இணைந்துள்ளனர்.

தற்போது பிரியா பவானி சங்கர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அறிமுக நடிகையான இந்துஜா தற்போது 'பில்லா பாண்டி' படத்தில் ஆர்கே சுரேசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புது படத்தில் இணைய உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் படத்தில் மேயாத மான் நாயகிகள்