Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சத்தமே இல்லாமல் உருவான படம் ஆகஸ்டில் வெளியீடு

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த படத்திற்கு 60 வயது மாநிறம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு, தனது கலைப்புலி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் வி கிரியேஷன் நிறுவனங்கள் சார்பில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். 1985இல் வெளியான 'யார்' என்ற பேய் படத்தின் மூலம் தனது தயாரிப்பு பணிகளை இவர் தற்போது வரை 29 படங்களை தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராக  விஜயகாந்தை வைத்து 'புது பாடகன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். காக்க காக்க, மாயாவி, கந்தசாமி, துப்பாக்கி, தெறி போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ள இவருடைய தயாரிப்பில் இறுதியாக வெளியான படம் 'ஸ்கெட்ச்'. விக்ரம் தமன்னா நடிப்பில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களுக்கு பிறகு தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் படி இந்த படத்திற்கு '60 வயது மாநிறம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சத்தமே இல்லாமல் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவான இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள் ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சத்தமே இல்லாமல் உருவான படம் ஆகஸ்டில் வெளியீடு