Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அறிவிப்பு

'சிவலிங்கா' படத்திற்கு பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'முனி 4 : காஞ்சனா 3'. இந்த படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற அனைத்து பணிகளையுமே லாரன்ஸ் கையாண்டு வருகிறார்.

இந்த படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா என இரு நாயகிகள் இணைந்து நடித்து வருகின்றனர்.மற்றொரு நாயகியாகவும் நிக்கி நம்பொலி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஒரு பாடல் காட்சிகள் தவிர அனைத்து படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனால் தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியினை படக்குழு உறுதி செய்துள்ளது.

இதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வரும் இந்த படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 வெளியீடு தேதி அறிவிப்பு