Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு

இயக்குனர் சங்கர், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சங்கரின் 'ஐ' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இவருடைய எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த பிரமாண்ட படைப்பு '2.0'. இந்த படம் கடந்த 2010இல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ஆனால் இந்த படம் 100 நிமிடங்கள் மட்டுமே அதாவது 1 மணிநேரம் 40 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடியதாக இயக்குனர் உருவாக்கியுள்ளார்.

இந்த படத்தில் காதல், பாடல்கள் போன்ற எதுவும் கிடையாதாம். இந்த படம் முழுக்க பக்கா ஆக்சன் கலந்த அறிவியல் படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களாக உருவாகி வந்த இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாமல் இழுத்து கொண்டே செல்கிறது.

இந்த படத்தின் டீசர் முன்னதாகவே வெளியாக இருந்த நிலையில் யாரோ இணையத்தளத்தில் திருட்டு தனமாக வெளியிட்டு படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதனால் வெளியாக இருந்த டீசரும் தள்ளி போனது. இதன் பிறகு அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்க, ஒரு வழியாக இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி இந்த படம் நவம்பர் மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் 2.0 டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு