Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெளியானது சூப்பர் ஸ்டாரின் புதுப்பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகி வரும் பேட்ட படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் காலா படத்திற்கு பிறகு அடுத்ததாக 2.0 படம் வரும் நவம்பர் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியீடு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் டீசர் வரும் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், த்ரிஷா, சிம்ரன் போன்ற முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணியளவில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட உள்ளதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்காக ரசிகர்கள் எப்படா 6 மணி ஆகும் என்று ஆர்வமுடன் காத்து கொண்டிருந்தனர்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதன்படி அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு 'பேட்ட' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வெளியான மோஷன் போஸ்டரும் செம மாஸாக அமைந்துள்ளது. இதனை கண்டு ரசிகர்கள் ஆர்வமுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டருக்கு பிறகு விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவையை படக்குழு வெளியிட உள்ளது.

வெளியானது சூப்பர் ஸ்டாரின் புதுப்பட தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர்