Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

ரஜினிகாந்தின் பேட்ட இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்தின் பேட்ட இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

காலா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் நவம்பர் 29ஆம் தேதியில் வெளியாகவுள்ள படம் '2.0'. இன்னும் 5 நாட்களே உள்ளதால் இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'பேட்ட' படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள் பாடல் வெளியீடு தேதியினை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், டிசம்பர் 3லும், செகண்ட் சிங்கிள் பாடலை டிசம்பர் 7ஆம் தேதியிலும் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் மொத்த பாடல்களையும் டிசம்பர் 9இல் வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

ரஜினிகாந்தின் பேட்ட இசை வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு