Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

உறுதியானது பொங்கலுக்கு விசுவாசத்துடன் மோதும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட

உறுதியானது பொங்கலுக்கு விசுவாசத்துடன் மோதும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட

காலா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் 2.0 மற்றும் பேட்ட படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பேட்ட' படமும் முழு வீச்சில் நடந்து வருகின்றது. இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்த நிலையில் தற்போது படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை புது போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு அமைய உள்ளது. ஏற்கனவே தல அஜித்தின் 'விசுவாசம்' படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் பொங்கலில் விசுவாசமும் பேட்ட படமும் ஒன்றோடொன்று மோத உள்ளது.

உறுதியானது பொங்கலுக்கு விசுவாசத்துடன் மோதும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட