Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'சென்னை என்கிற மெட்ராஸ்' படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

rajinikanth wishes chennai yengira madras movie trailer

இயக்குனர் அரவிந்த் குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'சென்னை என்கிற மெட்ராஸ்'. இந்த படம் விமான துறை சார்ந்த படமாகும். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த படத்தின் ட்ரைலர் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் இயக்குனர் அரவிந்த் குமார் நிச்சயம் பெரிய படத்தை இயக்குவார் என்றும் இந்த ட்ரைலரின் மேக்கிங் மற்றும் கருத்துக்கு தனது பாராட்டையும் ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார். 

படக்குழுவினருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதனை அடுத்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இந்த படத்தின் ட்ரைலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர்கள் சுந்தர் மூர்த்தி, இன்பராஜ், சுபாஷ், காசிஸ் வர்மா மற்றும் பர்சா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் மூத்த நடிகர் சுபலேகா சுதாகர், மூணார் ரமேஷ், மீம் கோபி, கௌரிசங்கர், பிரசாந் பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையின் வடக்கு பகுதியில் நடந்து வருகிறது. இந்த படம் இந்தியாவின் முதல் இரகசிய புலனாய்வு பத்திரிகையாளர் படமாக விளங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

'சென்னை என்கிற மெட்ராஸ்' படக்குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார்