Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

18 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் 'சர்வம் தாள மயம்'

18 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் 'சர்வம் தாள மயம்'

பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் 18 ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகிற்கு மீண்டும் வரயிருக்கிறார். இவர் பிரபு தேவாவின் - மின்சார கனவு, அஜித், மம்மூட்டி போன்றவர்கள் நடித்த 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' போன்ற படங்களை இயக்கி நல்ல வரவேற்பினை பெற்றவர்.        

ராஜீவ் மேனன் இயக்கவிருக்கும் 'சர்வம் தாள மயம்' படத்தில் இசையமைப்பாளர் மற்றும் வளர்ந்து வரும் ஹீரோக்களின் ஒருவராக இருக்கும் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக  நடிக்கயிருக்கிறார். தமிழ் நாட்டின் கலாசாரமான இசையை முக்கியத்துவம் கொண்டு எடுக்க உள்ள இப்படத்தில் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதில் ஒரு குத்து பட்டாலும் இடம் பெற்றிருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் மேனன் இயக்கிய இரண்டு படங்களுக்கும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்ததினை தொடர்ந்து  'சர்வம் தாள மயம்' படத்திலும் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் கதாநாயகிக்கான தேர்வு மற்றும் மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.   

இப்படத்திற்கான படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் நடிப்பில் நாச்சியார், அடங்காதே, குப்பத்து ராஜா போன்ற படங்கள் வெளிவர இருக்கும் தருணத்தில், 4ஜி, ஐயங்கரன், 100% காதல் போன்ற படங்களில் நடித்துவருகிறார்.       

18 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் மேனன் இயக்கும் 'சர்வம் தாள மயம்'