Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வெயில் பிரியங்கா தமிழுக்கு ரீ என்ட்ரி

veyil priyanka new movie

சில வருடங்களுக்கு முன்பு வசந்த பாலன் இயக்கத்தில் 'வெயில்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ப்ரியங்கா, 'தொலைபேசி', 'திருத்தம்' போன்ற படத்தினை தொடர்ந்து மலையாள திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதனை அடுத்து நீண்ட கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் நடிக்க இருக்கிறார். 

நவீன் கணேஷ் இயக்கத்தில் கின்னஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 'தியோருக்கு அஞ்சேல்' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதை குறித்து  ப்ரியங்கா கூறியது. 

"நான் பிறந்து வளர்ந்தது கேரளா என்றாலும் என்னை நடிகையாக்கியது தமிழ் சினிமா தான். எனது முதல் படம் வெயில், இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்புகள் கிடைத்ததினை தொடர்ந்து மலையாளத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. இதன் காரணத்தினால் மலையாளத்தில் செட்டில் ஆகிவிட்டேன். தமிழில் நல்ல கதை கிடைக்காததால் இவ்வளவு காலம் நடிக்க வில்லை. 

இப்பொழுது தமிழில் இரண்டு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் அளித்திருக்கிறேன். அதில் ஒன்று தான் 'தியோருக்கு அஞ்சேல்' இந்த படம் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதினை எடுத்துதுறைக்கும் படமாக இருக்கும்" என்று கூறியுள்ளார்           

 

வெயில் பிரியங்கா தமிழுக்கு ரீ என்ட்ரி