Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

பிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி

நடிகர் ஆர்ஜே பாலாஜி பிரியா ஆனந்துடன் இணைந்து அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

காமெடி நடிகரான ஆர்ஜே பாலாஜி, சென்னையில் BIG FM 92.7 என்ற ரேடியோ சேனலில் டேக் இட் ஈசி மற்றும் கிராஸ் டாக் போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமானவர். ராஜஸ்தானை சேர்ந்தவரான இவர் எதிர்நீச்சல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். இந்த படத்திற்கு முன்பு 2013இல் புத்தகம் என்ற படத்தில் குரலை மட்டும் பதிவு செய்த இவருக்கு எதிர்நீச்சல் படம் தமிழ் சினிமாவில் பிரபலமாவதற்கு காரணமாக இருந்தது. இந்த படத்திற்கு பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, வல்லினம், யட்சன், நானும் ரவுடி தான் போன்ற பல படங்களில் நடித்து தற்போது காமெடி நடிகராக வளர்ந்து வருகிறார்.

இவருடைய நடிப்பில் இறுதியாக தியா என்ற படம் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து தற்போது இவர் கீ, அண்ணனுக்கு ஜே, யங் மங் சங், விசுவாசம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இளைஞர்களின் வளர்ச்சிக்காக தன்னுடைய குரலை பல மேடைகளில் பதிவு செய்து வரும் இவர் அரசியலில் நுழைய உள்ளதாக சமீபத்தில் இவருடைய ப்ரொபைல் பிக்ச்சர் மூலம் பரவியது. தற்போது இந்த தகவல் உண்மையாகியுள்ளது. நிஜ அரசியல்வாதியாக அல்ல அரசியல்வாதி கதாபாத்திரத்தில் புது படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை பிரபு என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து ப்ரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்திற்கு எல்கேஜி (LKG) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்து வருகிறார். தற்போதுள்ள அரசியல் நையாண்டியை வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.

பிரியா ஆனந்துடன் இணைந்து அரசியலில் களமிறங்கும் ஆர்ஜே பாலாஜி