Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

காரைக்குடியில் நடந்த விக்ரமின் 'சாமி 2' படப்பிடிப்பு - வீடியோ

saamy 2 movie shooting in karaikudi

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'சாமி'. இந்த படத்தில் விக்ரமின் நடிப்பு, வசனம், பன்ச் போன்றவை ரசிகர்களிடம் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது 'சாமி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. இந்த படம் 'சாமி' படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகர் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்ஹா, ஓஏகே சுந்தர், வேலுமணி, தியாகு, பாலா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பிரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையாக நடித்த கோட்டா சீனிவாசன் இறந்து விடுவார். இதன் தொடர்ச்சியாக 'சாமி 2' தயாராகிறது. பெருமாள் பிச்சைக்கு மகன்களாக  பாபிசிம்ஹா, ஓ.ஏ.கே.சுந்தர், பாலாசிங் ஆகியோர் நடிக்கின்றனர். அப்பாவை கொன்றதற்காக விக்ரமை பழிவாங்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் பெருமாள் பிச்சையின் வெண்கல சிலையை திறப்பது, அவரின் நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெறுவது, சிலையை திறக்கும் போது மக்கள் அதை தடுப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற படப்பிடிப்பை ஏராளமான ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

காரைக்குடியில் நடந்த விக்ரமின் 'சாமி 2' படப்பிடிப்பு - வீடியோ