Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஷால் பிறந்த நாளில் சண்டக்கோழி 2 குழுவின் முக்கிய அறிவிப்பு

விஷாலின் சண்டக்கோழி 2 வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக லிங்கு சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி 2' படம் வெளியாக தயாராக உள்ளது. விஷாலின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருடைய பிறந்த நாள் பரிசாக 'சண்டக்கோழி 2' படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் வரும் அக்டொபர் 18ஆம் தேதியில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் விஷாலின் 'சண்டக்கோழி 2' படத்திற்கும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

கடந்த 2005இல் வெளியான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் செங்கரட்டன் பாரையுல என்ற சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டது. இதன் பிறகு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசைக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

விஷால் பிறந்த நாளில் சண்டக்கோழி 2 குழுவின் முக்கிய அறிவிப்பு