Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சல்மான் கானின் ரேஸ் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

இந்தி நடிகரான சல்மான் கான் நடிப்பில் இறுதியாக 'டைகர் சிண்டா ஹேய்' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் குவித்து வந்தது. அதிரடி படமான இந்த படத்தில் நாயகியாக கத்ரீனா கைப் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சல்மான் கான் நடிப்பில் 'ரெஸ் 3' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் உள்ள அபு தாபியில் 35 நாட்கள் நடக்க உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் சல்மான் கான், அணில் கபூர், ஜாக்லின் பெர்னாண்டஸ், டைசி சா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை சல்மான் கான் தனது சல்மான்கான் பிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் எஸ் டயூரணிவுடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது. இந்த படத்தை ABCD 2, பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரெமோ டி சவுசா இயக்க உள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் வெளிவரவுள்ளது. இதனை தொடர்ந்து சல்மான் கான் நடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவாவுடன் இணைந்துள்ளார். இந்த படம் ''தபாங்' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாக உள்ளது.

சல்மான் கானின் ரெஸ் 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்