Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

96 தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும்  த்ரிஷா நடிப்பில் வெளியாகி தற்போதுவரை திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும்  படம் '96'. காதலை மையமாக வைத்து உருவா\கியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மெலடி பாடல்கள் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

இந்த படம் தற்போது நல்ல வசூலையும் குவித்து வருகின்றது. இந்த படத்தினை தெலுங்கிலும் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கியுள்ளார். இந்த படத்தினை தெலுங்கில் திரையுலகில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தெலுங்கிலும் நடிகை த்ரிஷாவே ஜானுவாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது த்ரிஷாவிற்கு பதிலாக சமந்தா நடிக்க உள்ளார். ஏற்கனவே த்ரிஷா, சிம்புவின் 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

96 தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா