Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சங்கமித்ரா ஷூட்டிங் - எப்ப தெரியுமா ?

Sangamithra movie poster

பாகுபலி படத்தினை போன்று வரலாற்று சாதனை படைக்கும் விதமாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘சங்கமித்ரா’ படம் உருவாக்கவிருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் உருவாக்க இருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா படானி உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சம்மந்தப்பட்ட எந்தவித தகவலையும் வெளிப்படுத்தாத நிலையில், படக்குழுவினர் அதிகார பூர்வ அறிவிப்பினை வெளிப்படுத்தி உள்ளது. இதில் படத்தின் படப்பிடிப்பு தமிழ் வருடப்பிறப்பு  நாளான ஏப்ரல் மாதம் 14ம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.   

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் சாபு சிரில் கலை இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்க இருக்கின்றனர்.        

சங்கமித்ரா ஷூட்டிங் - எப்ப தெரியுமா ?