Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

'சங்கு சக்கரம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - நேரலை

sangu chakkaram movie press meet

பிரபல தயாரிப்பு நிறுவனமான லியோ விசன்ஸ் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வெற்றிப்படங்களை தந்துள்ளது. இந்த படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக லியோ விசன்ஸ்  'சங்கு சக்கரம்' என்ற பேய் படத்தினை தயாரித்து வருகிறது. இந்த படம் தற்போதுள்ள குழந்தைகளுக்கு ஏற்றவாறு தயாராகி வருகிறது. இந்த படம் குழந்தைகளுக்கான திரில்லர் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தில் நடித்துள்ள மோனிகா என்ற குழந்தை படத்தில் நடித்ததின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த விடியோவை படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை சினிமாவாலா பிக்ச்சர்ஸ், திவ்யா மூவிஸ்,  லியோ விசன்ஸ் சார்பில் கே.சதீஸ், வி.எஸ்.ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் மாரிசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஷாபீர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் கீதா, திலீப் சுப்பராயன், மோனிகா, நிகேஷ், ஆதர்ஷ், பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் போன்றவை ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் 'டாறு டமாறு' என்று தொடங்கும் பாடலின் சிங்கிள் டிராக்கை இசையமைப்பாளர் கிப்ரான் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேரலையாக உங்கள் பார்வைக்கு....

'சங்கு சக்கரம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - நேரலை