Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் சந்தானமின் தில்லுக்கு துட்டு 2 டீசர் வெளியீடு

நடிகர் சந்தானமின் தில்லுக்கு துட்டு 2 டீசர் வெளியீடு

லொள்ளுசபா நிகழ்ச்சியின் இயக்குனரான ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற ஹாரர் கலந்த காமெடி படம் 'தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது மும்முரமாக உருவாகி வருகிறது. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்திலும் சந்தானத்தை ஒழித்து கட்ட உண்மையான பேய் பங்களாவில் மாட்டி கொள்வது போன்று உருவாக்கி வருகின்றனர். முதல் பாகத்தில் நடித்திருந்த மொட்டை ராஜேந்திரன், கார்த்திக் ஸ்ரீநிவாசன் போன்ற பலர்  நடித்துள்ளனர். சந்தானத்திற்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சபீர் இந்த படத்தின் இசையமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தினை ஹேண்ட்மேட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

நடிகர் சந்தானமின் தில்லுக்கு துட்டு 2 டீசர் வெளியீடு