Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாக நடிக்க உள்ள சசிகுமார்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் பேட்ட படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க உள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் 'பேட்ட'. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஜினி மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை வாரணாசியில் எடுத்து முடித்த நிலையில் படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், நவாஸுதீன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இவர்களுடன் தற்போது நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் 'பேட்ட' படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளது. பிளாஷ்பேக்கில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.

த்ரிஷாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க உள்ளார். தற்போது ரஜினி மற்றும் த்ரிஷா இவருடைய காதல் காட்சிகளையும் படமாக்கி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் விரைவில் சசிகுமாரும் இணைய உள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாக நடிக்க உள்ள சசிகுமார்