Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

நடிகர் சசிகுமாரின் அசுரவதம் படபிடிப்பு நிறைவு

asuravadham movie shooting stills

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'கொடி வீரன்' படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் எம் முத்தையா இயக்கியிருந்தார். தங்கச்சி பாசத்தை வைத்து உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சசிகுமார், இயக்குனர் மருது பாண்டியன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் முன்னதாக நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சசிகுமார், மருது பாண்டியன் முதன் முறையாக இணையும் இந்த படத்திற்கு 'அசுரவதம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை நந்திதா நடித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் மருது பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லீனா லலித்குமார் தயாரித்து வருகிறார். தற்போது  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. இந்த படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாகும்.

நடிகர் சசிகுமாரின் அசுரவதம் படபிடிப்பு நிறைவு