Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

விஜய் 62 படத்தில் வெளிவந்த தகவல் வதந்தி

sayesha denies rumours act in thalapathy 62

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகர் மற்றும் தமிழ், தெலுங்கு என இரு திரையுலகிலும் அதிகளவு ரசிகர்கள் வட்டாரத்தை பிடித்தவர்களின் ஒருவரான தளபதி விஜய் அவரது திரையுலக பயணத்தில் 62வது படத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ஏஆர். முருகதாஸ் இயக்கிவருகிறார். கத்தி, துப்பாக்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தில் பல பிரமாண்ட கலைஞர்களை இணைந்து படத்தினை சிறப்பான முறையில் இயக்கிவருகிறார். கடந்த சில நாட்களாக படத்தின் படப்பிடிப்பு சென்னை பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தாவில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் விஜய்யின் அதிரடி சண்டை காட்சிகளை படமாக்கி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சண்டை காட்சிகளை லீக் ஆகியிருப்பதாக  கடந்த நாட்களில் தகவல் வலைத்தளம் முழுக்க பரவி இருந்தது.          

இதனை தொடந்து படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து மற்றொரு நாயகியாக 'வனமகன்' புகழ் சாயிஷா சைக்கிள் இணைந்திருப்பதாகவும் தகவல் வந்திருந்தது. இந்நிலையில் நடிகை சாயிஷா இந்த தகவலை மறுத்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் 'நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவருடைய படத்தில் நாயகியாக நடிப்பதற்கு ஆசை இருக்கிறது. ஆனால் 'விஜய் 62' படத்தில் நாயகி கெட்டப்பில் நான் நடிப்பதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தியே' என்று கூறியுள்ளார்.  இதன் காரணத்தினால் சாயிஷா ரசிகர்களின் மத்தியில் வருத்தங்கள் நிலவி வருகிறது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தினை வருகிற தீபாவளி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.   

விஜய் 62 படத்தில் வெளிவந்த தகவல் வதந்தி