Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் வெளியாகும் சீதக்காதி மேக்கிங் வீடியோ

சீதக்காதி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்திற்கு பிறகு 96, சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா, சீதக்காதி மற்றும் கோலமாவு கோகிலா படத்திலும் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதில் நடிகை த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் '96' படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளரான சி பிரேம்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் 'சீதக்காதி' படத்தின் முக்கிய அறிவிப்பினை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் நாளை வெளியாக உள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் காயத்ரி மற்றும் பார்வதி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இசையமைத்து வருகிறார்.

சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் வெளியாகும் சீதக்காதி மேக்கிங் வீடியோ