Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

வைல் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் சீரியல் நடிகைகள்

சீரியல் நடிகைகளான ரஷிதா மகாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 51வது நாள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் யாராவது இரண்டு பேர் சண்டை போட வேண்டும் என்பது பிக்பாஸின் எண்ணம். பிக்பாஸின் எதிர்பார்ப்பிற்கேற்ப டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களிடையே வாக்கு வாதங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ரசிகர்களும் அடுத்த நாள் சண்டைக்காக ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். நேற்று 51வது நாள் நடந்த நிகழ்ச்சியில் பாலாஜிக்கு, மகத்துக்கும் இடையே கடும் வாக்கு வாதங்கள் நீதிமன்றத்தில் அரங்கேறியது.

இதன் பிறகு இன்று நடைபெறவுள்ள பிக்பாஸின் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள், டி-சர்டில் யாருடைய புகைப்படம் உள்ளதோ அவராகவே மாற வேண்டும். அதற்கேற்ப டேனியல் யாஷிகா கதாபாத்திரத்திலும், பொன்னம்பலம் மகத் கதாபாத்திரத்திலும் மாறியுள்ளனர். இதனால் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை கடந்துள்ள நிலையில் வைல் கார்ட் என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப்போகும் போட்டியாளர் யார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் சீரியல் நடிகைகளான ரஷிதா மகாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஷிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்த இந்த சீரியல் தற்போது மோசமாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் சரவணன் மீனாட்சி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது. மேலும் சென்னை 28, சரோஜா, சென்னை 28 II மற்றும் பிரியாணி போன்ற படங்களில் நடித்துள்ள விஜயலட்சுமி தற்போது நாயகி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனால் இந்த இரண்டு சீரியல் நடிகைகளில் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வைல் கார்ட் என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் சீரியல் நடிகைகள்