Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

டிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்

டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியை வைத்து இந்த படம் பண்ணுவதாக இருந்தேன் என இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான எஸ்ஏ சந்திரசேகர் நடிப்பில் 30 வருடங்களுக்கு பிறகு உருவாகி வரும் படம் 'டிராபிக் ராமசாமி'. இந்த படத்தை எஸ்ஏ சந்திரசேகரின் உதவி இயக்குனர் விக்கி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடித்துள்ளார். அவருடைய மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார். சமூக அக்கறை கொண்ட படமான இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, மனோபாலா, குஷ்பூ ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஜூன் 22 முதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எஸ்ஏ சந்திரசேகர், ரோகினி, ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இந்த படத்தை ரஜினியை வைத்து இயக்க இருந்ததாக இயக்குனர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் "சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி என்னையும் கவர்ந்த ஒரு மனிதர். அவரை நினைத்து எப்போதும் பெருமைபடுவேன். வயதை பொருட்படுத்தாமல் சமூகத்தின் அவருக்குள்ள ஆர்வத்தினால் இப்போது வரையிலும் பாடுபட்டு வருகிறார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை கொண்டு ரஜினி சாரை வைத்து படம் எடுக்க நினைத்தேன். ஆனால் நான் நினைத்த படத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் இந்த படத்தை பார்க்க நான் ஆவலோடு உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

டிராபிக் ராமசாமி ரஜினி நடிக்க வேண்டிய படம்