Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

எங்கேயும் எப்போதும் புகழ் ஷர்வானந்த் புது பட தகவல்

sharwanand new film updates

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஷர்வானந்த் பல வெற்றி படங்களை திரையுலகில் கொடுத்துள்ளார். இவர் தமிழில் காதல்னா சும்மா இல்ல படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அவரது நடிப்பில் வெளிவந்த காதல் கலந்த காமெடி படமான 'எங்கேயும் எப்போதும்' என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான சீமா விருது வழங்கப்பட்டது. ஷர்வானந்த் தற்பொழுது இயக்குனர் சுதீர் வர்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். காதல் கலந்த அதிரடி த்ரில்லராக உருவாகவிருக்கும் இப்படத்தில் இரு நாயகிகள் இணையவுள்ளனர். தற்பொழுது வந்த தகவலில்  'ஹெலோ' புகழ்  கல்யாணி நாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் – நடிகை லிஸ்ஸியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த தகவலை இயக்குனர்  சுதீர் வர்மா அவரது ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்க இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவருடன் திவாகர் மணி ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் மற்றொரு நாயகி, இதர நடிகர் - நடிகைகளின் பட்டியலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

எங்கேயும் எப்போதும் புகழ் ஷர்வானந்த் புது பட தகவல்