க்ளைமேக்சில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்
வேலுசாமி (Author) Published Date : Apr 30, 2018 17:58 ISTபொழுதுபோக்கு
மார்வல் ஸ்டுடியோஸின் அவெஞ்சர்ஸ் வரிசையில் மூன்றாம் பாகமாக கடந்த ஏப்ரல் 27இல் உலகம் முழுவதும் வெளியான படம் 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்'. ஆங்கில படமாக இருந்தாலும் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதன்படி இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தினை ரூஸ்ஸோ சகோதரர்கள் இணைந்து இயக்கியுள்ளனர்.
மார்வல் ஸ்டுடியோஸ் சூப்பர் ஹீரோஸ் படங்களான அயன் மேன், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா போன்ற படங்கள் முன்னதாக இந்தியாவில் வெளியாகி மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தையே பிடித்து விட்டது. இதனால் தற்போது வெளியாகியுள்ள இந்த படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. இந்த படத்தில் 25 சூப்பர் ஹீரோசும் இணைந்து ஒரு வில்லனை எதிர்கொள்கின்றனர். இந்த படத்தின் ஓப்பனிங் சீனிலே ஹல்க் வில்லனிடம் அடி வாங்கி சாய்ந்ததால் ஹல்க் இறுதிவரை வெளிவரவில்லை.
இதன் பிறகு ப்ருஸ் பூமிக்கு வந்து தானோசை அழிக்க அவென்ஜர்ஸ் குழுவை திரட்டுகிறார். இந்த படத்தில் வில்லனான தானோஸ் பிரபஞ்சத்தை அளிப்பதற்காக உயிர், நேரம், விண்வெளி, மனம், உண்மை மற்றும் ஆற்றல் போன்ற சக்திகள் அடங்கிய 6 கற்களை தேடி அலைகிறான். 3 கற்கள் ஏற்கனவே கிடைத்து விட, 4 வது கல்லை தோரின் சொந்த உலகமான ஆஸ்கார்டை அழித்து லோகியிடம் உள்ள இருக்கும் கல்லை கைப்பற்றுகிறான். தோருக்கு அவரது சுத்தி இல்லாததால் தனோசை எதிர்க்க முடிவதில்லை.
இதனால் தனக்கு தனோசை வீழ்த்தக்கூடிய சுத்தியை தேடி அலைகிறான். மீதமுள்ள இரண்டு கற்கள் பூமியில் உள்ளதால் பூமியை நோக்கி புறப்படுகிறான் தானோஸ். ஆனால் தானோஸ் பூமிக்கு வந்தால் பூமியை நாசம் செய்து விடுவான் என்று அயன் மென், ஸ்பைடர் மேன், 5வது கல்லை பாதுகாக்கும் மேஜிக் மேன் ஆகியோர் இணைந்து தனோஸ் இருக்கும் இடத்தை நோக்கி புறப்படுகிறார்கள். தனோசை அவன் இடத்தில் வீழ்த்த திட்டம் தீட்டி சண்டை புரிகின்றனர். இந்த சண்டை அயன் மேன் திட்டப்படி கைகூடும் நேரத்தில் பீட்டர் குயில் சொதப்பி விடுகிறார். இதனால் இந்த சண்டையில் தோற்று 5வது கல்லையும் பறிகொடுக்கின்றனர்.
பின்னர் 5 கற்களுடன் பூமியை நோக்கி ஜார்விஸ் தன் நெற்றியில் வைத்துள்ள 6கல்லை கைப்பற்ற புறப்படுகிறான். 5கற்கள் கிடைத்த பின்னர் வலுவடைந்த தானோசை எதிர்க்க முடியவில்லை. எதிர்க்கும் ஒவ்வொரு வீரையும் சொடக்கு போடும் நேரத்தில் தோற்கடித்து விடுகிறான். இறுதியாக ஜார்விசை அழித்து 6வது கல்லையும் கைப்பற்றி விடுகிறான். ஆனால் 6 ஆற்றலும் ஒன்று சேரும் தருணத்தில் தோர் தனக்கு கிடைத்த புது கோடாரியை தனோசை நோக்கி வீச, அது வில்லன் நெஞ்சில் பாய்கிறது. வில்லன் வீழ்ந்துவிட்டான் என்று எண்ணிய சமயத்தில் என்னை வீழ்த்த தலையில் அடித்திருக்க வேண்டும் என்று டிவிஸ்ட் அடிக்கிறார்.
பின்னர் 6சக்தியும் முழுமையடைந்து சொடக்கு போடும் நேரத்தில் பிரபஞ்சத்தின் பாதி உயிரனங்களை கொன்று விடுகிறான். இந்த இழப்பில் பிளாக் பந்தர், பால்கன், ஸ்பைடர் மேன், ஸ்கேர்லட் விட்ச், மான்டிஸ், ஸ்டார் லார்ட், டாக்டர் ஸ்ட்ரேஞ் உள்ளிட்ட பலரும் உயிரிழக்கின்றனர். இதில் அயன் மென், தோர், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோவ், ஹல்க் (ப்ருஸ்), ஒகோயே ஆகியோர் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். இந்த கிளைமேக்ஸை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பொதுவாக சூப்பர் ஹீரோஸ் படம் என்றாலே இறுதியாக வில்லனை தோற்கடித்து விரட்டும் படமாக இருக்கும். அப்படி தான் இந்த படத்தையும் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்த கிளைமேக்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரசிகர்கள் கலங்க வேண்டாம். மீதமுள்ள வீரர்களை கொண்டு தனோஸை அழிக்கும் படமாக 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் 2' உருவாக உள்ளது. இந்த படம் அடுத்த வருடத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
சண்டையில் இறந்தவர்கள்:
Black Panther, Falcon, Winter Soldier, Scarlet Witch, Drax, Groot, Mantis, Star Lord, Spider-Man, Doctor Strange, Nick Fury (post-credits), Maria Hill (post-credits).
உயிருடன் இருப்போர் :
Thor, Captain America,Iron Man, War Machine, Black Widow, Nebula, Okoye, Rocket, Bruce/Hulk.