Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இசை புயலாக உருவெடுக்கும் சிம்புவின் டெசி குத்து ப்ரோமோ

str new song desi kudhu promo

பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன், நயன்தாரா இணைந்து நடித்து 2016ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற 'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் கதை,  இசை அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவாக கவரப்பட்டது. இந்த தொடர் வெற்றிக்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'AAA'நடித்திருந்தார்.   

இதனை தொடந்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்ட்டி ஸ்டார் படத்தில் சிலம்பரசன் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இவர்களின் கூட்டணி இணைந்துள்ளது. படங்களில் நடிப்பதினை தொடர்ந்து தற்பொழுது இசையமைப்பாளராக வளம் வர ஆரமித்துள்ளார். முதல் முறையாக சந்தானத்தின் 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன் பிறகு 'தற்றோம் தூக்றோம்' அதிரடி ஹிட் பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதற்கு அடுத்த படியாக ‘மரண மட்ட' என்ற குத்து பாடலை ஜனவரி 1-ஆம் தேதி நியூ இயர் ஸ்பெஷலாக  வெளியிட்டார். இந்த பாடல் பிக் பாஸ் ஓவியா படியிருந்ததால் வரவேற்புகள் அதிகளவு இருந்தது.      

தற்பொழுது ‘டெசி குத்து' என்ற புது பாடல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோவிற்கு ரசிகர்களின் லைக்ஸ் அதிகரித்து வருகிறது. சிம்புவுடன் இணைந்து இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பாடியுள்ள இந்த பாடலின் முழு வெர்ஷன் விரைவில் ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளனர்.  

 

இசை புயலாக உருவெடுக்கும் சிம்புவின் டெசி குத்து ப்ரோமோ