Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

தீபாவளிக்கு சிம்புவின் அடுத்த பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னமின் 'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். 'செக்க சிவந்த வானம்' படத்திற்கு பிறகு என்னுடைய ரசிகர்களுக்காக தொடர்ந்து படங்களில் நடிப்பதாகவும், படப்பிடிப்பில் ஒழுக்கமாக கலந்து கொள்வதாகவும் நடிகர் சிம்பு தெரிவித்திருந்தார். இதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றது.

தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்திலும் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இதில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் பவன் கல்யாணின் 'அத்தரின்டிக்கி தேரடி' என்ற ரீமேக் படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் சிம்பு முழு நேர படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் தீபாவளிக்கு வெளியிடுவதாக லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

தீபாவளிக்கு சிம்புவின் அடுத்த பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு