Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிவகார்த்திகேயன் அருண்ராஜா காமராஜாவின் கனா படப்பிடிப்பு நிறைவு

கனா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி நன்றி விழாவை படக்குழு நேற்று நடத்தியுள்ளது.

நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜ் 'கனா' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை தனது நண்பரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் முதல் படம்.

பெண்களின் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சேருவதை லட்சியமாக கொண்ட ஒரு நடுத்தர பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் அவரது அப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடித்துள்ளனர். அருண்ராஜா காமராஜாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இதற்கான நன்றி விழாவை படக்குழு கோலாகலமாக நேற்று நடத்தியுள்ளது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், அருண்ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு உரையாடியுள்ளனர். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீடு தேதியினையும் விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் அருண்ராஜா காமராஜாவின் கனா படப்பிடிப்பு நிறைவு