Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மதுர வீரன் ட்ரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

sivakarthikeyan launch madurai veeran movie trailer

இயக்குனர்  பி.ஜி.முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மதுர வீரன்'. இந்த படத்தில் 'சகாப்தம்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை வி.ஸ்டுடியோஸ் மற்றும் பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அறிமுக நாயகி மீனாட்சி, மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். 

இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை இயக்குனரே மேற்கொண்டுள்ளார். முன்னதாக இந்த படத்தின் சிங்கிள் டிராக்கை நடிகர் சமுத்திரக்கனி வெளியிட்டார். இதனை தொடர்ந்து  இந்த படத்தின் 'நெஞ்சிக்குள்ளே' என தொடங்கும் பாடலை பேட்மிட்டன் வீராங்கனை பீவி சிந்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். 

மதுர வீரன் ட்ரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்