Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி

sivakarthikeyan new movie television rights bagged by suntv

வளர்ந்து வரும் நடிகருள் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக 'வேலைக்காரன்' படம் வெளியானது. இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் மார்க்கெட்டிங் என்ற பெயரில் விற்கும் பொருள்கள் மூலம் வரும் ஆபத்துகளை பற்றி இயக்குனர் மோகன் ராஜா ஆழமாக தெரிவித்திருந்தார்.

மேலும் இளைஞர்களுக்கு தூண்டுதலாக அமைந்த இந்த படம் தற்போது பள்ளி குழந்தைகள் மாணவர்களுக்கு இலவசமாக திரையிட பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் ரவிகுமாருடன் இணைந்துள்ளார். இவர் முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால், மலையாள நடிகை மியா, கருணாகரன் ஆகியோரது நடிப்பில் வெளியான 'இன்று நேற்று நாளை' என்ற படத்தை இயக்கியவர்.

தற்போது இவருடைய இரண்டாவது படத்திற்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். இந்த படமும் அறிவியல் சார்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தை 'வேலைக்காரன்' படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஐந்தாவது படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி காட்ட படப்பிடிப்பு படக்குழு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் பொன்ராமுடன் இணைந்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் புது படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கிய சன்டிவி