Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள புதுப்படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்

sivakarthikeyan first movie productions for singer arunraja kamaraj directional debut

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது சீமராஜா படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கும் புது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் புது பட தகவல் வந்துள்ளது. இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள முதல் படமாகும்.

இந்த படத்தை நடிகர் மற்றும் பிரபல பாடகரான அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார். இவர் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று நிகழ்ந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் மற்றும் பாடகரான அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இவருடைய நடிப்பில் 'நட்புனா என்னானு தெரியுமா' படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. தற்போது இவருடைய இயக்கத்தில் முதல் படமாக உருவாக உள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ள புதுப்படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்