Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சிவகார்த்திகேயனின் சீம ராஜா வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்தின் வெளியீடு தேதியை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வேலைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சீம ராஜா'. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு பிறகு மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் அந்நாளை பேர்வெல் நாளாக கோலாகலமாக கொண்டாட உள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதன் முறையாக சமந்தா இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேசும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இரு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தில் நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் பெற்றோர்களாக நடித்துள்ளனர். வேலைக்காரன் படத்திற்கு பிறகு இந்த படத்தையும் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த இரண்டு படங்களையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு தேதியினை 24ஏஎம் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோரது படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் பணிகளும் தற்போது துவங்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நயன்தாரா ஆகியோர் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

சிவகார்த்திகேயனின் சீம ராஜா வெளியீடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு