Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்

சிறந்த ஓவிய கலைஞரான பிருந்தா சிவகுமார் தற்போது தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

முன்னாள் நடிகரான சிவகுமாரின் பிள்ளைகளான நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளர்ந்து வருகின்றனர். இவருவரும் தங்களின் நடிப்பு திறமையின் மூலம் தனி ரசிகர்கள் வட்டாரத்தையே வைத்துள்ளனர். நடிகர் சிவக்குமார் குடும்பத்தில் ரசிகர்களுக்கு பெரும்பாலும் அறிந்தவையெல்லாம் சூர்யா மற்றும் கார்த்தி மட்டுமே. நடிகர் சிவகுமாருக்கு பிருந்தா என்ற மகளும் இருக்கிறார். சூர்யா, கார்த்தி இருவரும் எனது கண்கள் என்றால் என் மகள் பிருந்தா தான் எனது உயிர் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

தற்போது 38 வயதான பிருந்தாவிற்கு கடந்த 2015இல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் தன்னுடைய அப்பா பெயரை கொண்ட சிவகுமார் என்பவரை கரம் பிடித்தார். சிவகுமாரின் இளைய மகளான இவர், தனது சகோதரர்கள் தன்னுடைய அப்பா வழியில் திரைத்துறைக்கு திரும்ப பிருந்தா மட்டும் அப்பாவின் கலை திறமையான ஓவியத்தில் ஈடுபாடு கொண்டார். மேலும் இவர் தற்போது சூர்யாவின் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தையும் கவனித்து வருகிறார். பிருந்தா சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர்.

என்னதான் வசதி இருந்தாலும் நடுத்தர வர்க்க பெண்ணாகவே சிவகுமார் பிருந்தாவை வளர்த்தார். இவர் கல்லூரியில் பயிலும் போது விலையுயர்ந்த கார்கள் இருந்தாலும் அன்றாடம் மக்கள் பயணித்து வரும் கல்லூரி பேருந்திலே பயணம் செய்வாராம். இவர் தற்போது திரைத்துறையில் அறிமுகமாக ஆரம்பித்துள்ளார். இயக்குனர் திரு இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் ஆகியோரது நடிப்பில் 'மிஸ்டர் சந்திரமௌலி' படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

சாம் சிஎஸ் இசையமைப்பில் பிருந்தா சிவகுமார் 'மிஸ்டர் சந்திரமௌலி' என தொடங்கும் பாடலை சாம் சிஎஸ் உடன் இணைந்து பாடியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தயாரிப்பாளர் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சமீபத்தில் நடைபெற்றது. இதன் பிறகு தற்போது இந்த படத்தின் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவின் சகோதரி பிருந்தா சிவகுமார்