Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

எஸ்.ஜே.சூர்யாவின் இரவாக்காலம் படத்தின் புது தகவல்

sj suryas iravaakaalam shooting wrap up

  ஸ்பைடர் ,மெர்சல் படத்தில் வில்லன் கெட்டப்பில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற எஸ்.ஜே.சூர்யா தற்பொழுது  ‘இறவாக்காலம்'  மற்றும் 'ஒரு நாள் கூத்து' இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத ஒரு புது படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் 'இறவாக்காலம்' படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாகவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி கலந்த காதல் படமாக உருவாகி வரும் இப்படத்தினை இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மாயா'படத்தினை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது   

இந்த படத்தில் இரண்டு நாயகிகள் களமிறங்கியுள்ளனர். அதில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக  ‘அதே கண்கள்’ புகழ் ஷிவதா நாயர் இணைந்துள்ளார். மற்றொரு நாயகியாக ‘மாலை நேரத்து மயக்கம்’ வாமிகா நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  என்.முரளி ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி தயாரித்து வரும் இப்படத்தில் ரான் யோஹான் இசைமைத்துள்ளார். இவருடன் இணைந்து விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.  

மேலும் இப்படத்தில் இருந்து கடந்த நாட்களில் வெளிவந்த போஸ்டர், டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது  நிறைவடைந்து விட்டதாக  படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார்.    

எஸ்.ஜே.சூர்யாவின் இரவாக்காலம் படத்தின் புது தகவல்