தோனி ஸ்டார்க்கின் 2கோடி மதிப்புள்ள அயன் மென் உடை திருட்டு
வேலுசாமி (Author) Published Date : May 11, 2018 14:33 ISTபொழுதுபோக்கு
நடிகர் ராபர்ட் டௌனி, உலகம் முழுவதும் தனது அயன் மென் கதாபாத்திரத்தின் மூலம் மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோ படங்களில் மார்வெல்சின் அயன்மேன் படம் மிகவும் புகழ்பெற்றது. அயன் மென் வரிசையின் முதல் படம் கடந்த 2008இல் வெளியானது. இந்த படம் வெளியாகின10 ஆண்டுகளில் 16பில்லியன் வசூல் சாதனையை படைத்தது. பாக்ஸ் ஆபிசில் இந்த படம் 585 மில்லியன் டாலரை எட்டியுள்ளது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அயன் மேன் 1, 2, 3 மற்றும் அவெஞ்சர்ஸ் வரிசையிலும் இந்த அயன் மேன் கதாபத்திரம் முதன்மையானதாக உள்ளது.
முதல் பாகத்தின் போது தயாரிக்கப்பட்ட அயன்மேன் உடையானது இந்திய மதிப்பில் 2.5 கோடி மதிப்புள்ளது. இந்த ஆடையை அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரைப்பட பொருட்காட்சியில் பத்திரப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த உடையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த உடையை பில் சாண்டர்ஸ் (Phil Saunders) என்ற கலைஞர், அடி கிரானோவ் (Adi Granov) என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்த ஆடையை கடந்த 2007இல் அயன் மேன் 2008 படத்திற்காக ஒரு வருடங்கள் சிரமப்பட்டு மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருந்தார். தற்போது அயன்மேன் ஆடைகள் படத்திற்கேற்ப ஆடையில் மாற்றம் செய்து தயாரித்து வருகின்றனர். தற்போது வெளியான அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் என்ற படத்தில் அயன் மேன் உடை நானோபைட்ஸ் மூலம் ஒரு பட்டனை அழுத்தினாள் உருவாகும் அயன் மேன் ஆடையாக தயாரித்துள்ளனர். முதல் பாகத்தில் மார்க் 1 எனப்படும் அயன்மேன் ஆடையை திரைப்பட பொருட்காட்சியில் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆடையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.