Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யாவின் 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்

சூர்யாவின் 36 படத்தின் தலைப்பு NGK என்று வைக்கப்பட்டுள்ளது

சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் `தானா சேர்ந்த கூட்டம்'. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இதனை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர்பிரபு தயாரித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 5ம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்தனர். அதன்படி, தற்போது இந்த படத்திற்கு ‘NGK’ (‘என்ஜிகே’) என்று தலைப்பு வைத்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் சூர்யாவின் வித்தியாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டரும், தலைப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

சூர்யாவின் 36 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்