Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

புத்தாண்டில் தொடங்கிய சூர்யாவின் புதுப்பட பூஜை

suriya 36 movie poojai starts yesterday

 இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைய உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சத்யன் உள்ளிட்ட பல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த போஸ்டர், டீசர், இசை போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 36 வது படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்குகிறார். இந்த  படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.

 சமீபத்தில் இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி இணைகிறார் என்று படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்தது. இதனை அடுத்து நேற்று புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை தொடங்கி அதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பொங்கல் முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளியில் வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

புத்தாண்டில் தொடங்கிய சூர்யாவின் புதுப்பட பூஜை