Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

சூர்யா கேவி ஆனந்த் கூட்டணியில் இணைந்த நடிகர் நடிகைகள்

சூர்யா 37 படத்தில் இணைந்து நடிக்க உள்ள நடிகர் மற்றும் நடிகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'என்ஜிகே'. இந்த படத்தை தீரன், அருவி போன்ற படங்களுக்கு பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரண்டு முன்னணி நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். அரசியல் கலந்த ஆக்சன் படமான இந்த படத்தில் சூர்யா அரசியல் வாதியாக, சமூக போராளியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக கேவி ஆனந்த், விக்ரம் குமார் மற்றும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதில் அயன், மாற்றான் போன்ற படங்களுக்கு பிறகு சூர்யா, கேவி ஆனந்த் இணைந்துள்ள இந்த படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

முன்னதாக இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அடுத்ததாக இந்த படத்தில் சமுத்திரக்கனி, அல்லு சிரிஷ், போமன் இராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான போமன் இராணி தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். இது தவிர இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் நாயகியான சயிஷா நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஜிகர்தண்டா மற்றும் அம்மா கணக்கு போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி என்பவர் இணைந்துள்ளார். 

சூர்யா கேவி ஆனந்த் கூட்டணியில் இணைந்த நடிகர் நடிகைகள்