Policy pages

  Disclaimer Policy   Privacy Policy

Social Media

Twitter Facebook
Copyright Stage3 தமிழ் 2024.
All Rights Reserved

இயக்குனர் சுசீந்திரனின் ஜீனியஸ் வெளியீடு தேதி அறிவிப்பு

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனியஸ் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் படத்திற்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு, ஏஞ்சலினா, ஜீனியஸ் மற்றும் சாம்பியன் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் புதுமுக நடிகர்களை திரைத்துறையில் அறிமுகப்படுத்தி வரும் இயக்குனர் சுசீந்திரன் ஏஞ்சலினா, ஜீனியஸ், சாம்பியன் படங்களின் மூலமும் புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார்.

இதில் தற்போதைய மாணவர்களின் நிலைமையை பற்றி பேசும்படமாக 'ஜீனியஸ்' உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு சமூகம், தேசப்பற்று, விளையாட்டு போன்றவற்றை கற்பிக்காமல் அறிவு வளர்ப்பதாக நினைத்து படிப்பை மட்டுமே திணித்து அவர்களை முட்டாளாக்கும் பெற்றோர்களுக்கு இந்த படம் பாடம் புகட்டும். முன்னதாக இந்த படத்தின் டீசர்  வெளியான நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசையும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தணிக்கை குழு இந்த படத்திற்கு UA சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் பிறகு இந்த படத்தினை வரும் அக்டோபர் 26ஆம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் யுவனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திலிருந்து 'விளையாடு மகனே' என்ற லிரிக் பாடல் விடீயோவையும் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சுசீந்திரனின் ஜீனியஸ் வெளியீடு தேதி அறிவிப்பு